ஆண்டு தோறும் மன்றத் தமிழ் தேர்வுகள் சிரிய முறையில் நடைபெற ஊக்கம் தந்து உதவிய முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள், தமிழாசிரியர்கள் அனைவருக்கும் நன்றி.
மாணவர்கள் பயன்பெறும் வகையில் 10, 12 ஆம் வகுப்பிற்கு மட்டும் மாணவர் மன்ற முன்மாதிரித் தமிழ்த் தேர்வுகள் நடத்தப்படும். ஆகவே, இவ்வாண்டில் மிகுதியான மாணவர்கள் மன்றத் தேர்வில் கலந்து கொள்ள ஆவன செய்து உதவுமாறு வேண்டுகிறோம்.
பத்தாம் வகுப்பு (S.S.L.C)/மெட்ரிகுலேஷன்(10 ஆம் வகுப்பு) 04.02.2017 சனிக்கிழமை
முற்பகல் 10 மணி முதல் 12.30 மணி வரை தாள் 1
பிற்பகல் 2 மணி முதல் 4.30 மணி வரை தாள் 2
பன்னிரண்டாம் வகுப்பு(+2)/மெட்ரிகுலேஷன்(12 ஆம் வகுப்பு) 04.02.2017 சனிக்கிழமை
முற்பகல் 10 மணி முதல் 1 மணி வரை பொதுத் தமிழ் தாள் 1
பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை பொதுத் தமிழ் தாள் 2
பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புத் தமிழ்த் தேர்வுகளில் மாநில முதன்மை பெறும் பள்ளிகளுக்குக் கேடயங்கள் மன்ற ஆண்டு விழாவில் வழங்கப் பெறும், இவை தவிர ஒவ்வொரு பள்ளியிலும் ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்குத் தமிழ் நூல்கள் பரிசாக வழங்கப்படும்.
முதற்பரிசு ரூ 700 இரண்டாம் பரிசு ரூ 500 மூன்றாம் பரிசு ரூ 300
மாவட்டங்களில் முதன்மை பெறும் மாணவர்களுக்குச் சிறப்பு பரிசாகத் தமிழ் நூல்கள் வழங்கப்படும்.
முதற்பரிசு ரூ 1000 இரண்டாம் பரிசு ரூ 800 மூன்றாம் பரிசு ரூ 500
தேர்வுகளில் நூற்றுக்கு 60ம் அதற்கு மேலும் மதிப்பெண் பெறுபவர்க்கு முதல் வகுப்பு நன்மதிப்பிதழும், 50 முதல் 59 வரை மதிப்பெண் பெறுபவர்க்கு இரண்டாம் வகுப்பு நன்மதிப்பிதழும், 35 முதல் 49 வரை மதிப்பெண் பெறுபவர்க்கு மூன்றாம் வகுப்பு நன்மதிப்பிதழும் வழங்கப்பெறும்.
| பத்தாம் வகுப்பு (S.S.L.C) | (இரண்டு தாள்கள்) | ரூ 40.00 |
| மெட்ரிக் பத்தாம் வகுப்பு (S.S.L.C) | (இரண்டு தாள்கள்) | ரூ 40.00 |
| பன்னிரண்டாம் வகுப்பு | (இரண்டு தாள்கள்) | ரூ 45.00 |
| மெட்ரிக் பன்னிரண்டாம் வகுப்பு | (இரண்டு தாள்கள்) | ரூ 45.00 |
தேர்வுக் கட்டணத் தொகையில் 20% விழுக்காடு தேர்வுச் செலவுக்கெனப் பிடித்துக் கொண்டு எஞ்சிய தொகையை அனுப்புதல் வேண்டும். மன்றத் தேர்வு மேற்பார்வையாளர் அன்பளிப்பு, விடைத்தாள்களைத் தேர்வாளர்கட்கு அனுப்பி வைக்கும் பார்சல் செலவு, தேர்வுச் சமயத்தில் உதவும் பணியாளர் அன்பளிப்பு ஆகிய செலவுகள் யாவும் தேர்வுச் செலவில் அடங்கும்.
தேர்வு எழுதுவதற்குரிய விடைத்தாள், தேர்வுக் கட்டணம் முதலியவற்றை அனுப்புதல் போன்ற செலவுகளுக்கு மாணவர்களிடமே பணம் பெற்றுக்கொள்ள வேண்டும்.
| பத்தாம் வகுப்பு | ஒரு தாளுக்கு | ரூ 4.00 |
| பன்னிரண்டாம் வகுப்பு | ஒரு தாளுக்கு | ரூ 5.00 |
10, 12 ஆம் வகுப்புத் தேர்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள், தனித்தனியே ஒவ்வொரு வகுப்பிலும் முப்பது மாணவர்களுக்குக் குறையாமல் இருந்தால் விண்ணப்பம் அனுப்ப வேண்டும். அவர்கள் பயிலும் பள்ளியையே தேர்விடமாக வைத்துக் கொள்ளவேண்டும். முப்பதிற்குக் குறைவாக மாணவர்கள் உள்ள பள்ளியினர் விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டா.
குறிப்பிட்ட காலம் கடவாமல், விண்ணப்பங்களையும், தேர்வுக் கட்டணத் தொகையையும் அனுப்பித் தேர்வுப் பணி சிறக்க ஒத்துழைக்க வேண்டும்.
தேர்வுக் கட்டணத்தைக் கேட்போலையாக (Demand Draft) அல்லது பணவிடையாக ( M.O. ) அனுப்ப வேண்டும். காசோலையாக ( Cheque ) அனுப்ப வேண்டா. கேட்போலையில். Manavar Manram, Chennai – 1. என்று குறிப்பிட்டு வாங்கி, விண்ணப்பத்துடன் இணைத்து ஒரே உறையில் மாணவர் மன்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
பணவிடையாகவோ, கேட்போலையாகவோ அனுப்பி வைக்கும்போது, பள்ளி முகவரியையும் எந்ந வகுப்பில், எத்தனை மாணவர்கட்குரிய கட்டணம் என்பதையும், தவறாமல் குறித்து ஒரு கடிதம் இணைத்து அனுப்புக. விண்ணப்பத்தையும், கட்டணத்தையும் நேரிலும் தரலாம்.
தேர்வு நாளினை மாற்றம் செய்ய இயலாது. முழுக்கட்டணத்துடன் வரும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். எக்காரணத்தை முன்னிட்டும் தேர்வுக் கட்டணத்தைத் திருப்பி அனுப்ப இயலாது.